மதுரை எய்ம்சில் ஜூன் முதல் புறநோயாளிகள் பிரிவு

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்து இயக்குனர் அனுமன் ராவ் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் பிப்ரவரி மாதம் ராமநாதபுரத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்களை மதுரைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவர்களுக்காக வகுப்பறைகள் மற்றும் தனித்தனி விடுதிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், ஜூன் மாதம் புறநோயாளிகள் பிரிவு பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது 2022 ஆம் ஆண்டு முதல் ராமநாதபுரத்தில் சுமார் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி