மதுரை: அண்ணாமலை பேரை சொன்னபோது உற்சாகமடைந்த நிர்வாகிகள்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் வேலம்மாள் குளோபல் மருத்துவமனை மைதானத்தில் தமிழக பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது. 

மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் உரையாற்றியபோது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெயரை கூறியபோது அமைதியாக இருந்த பாஜக நிர்வாகிகள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரை சொன்ன நொடியே, பாஜக கட்சித் துண்டுகளை தலைமீது சுற்றியபடி ஆரவாரம் எழுப்பி பாஜக நிர்வாகிகள் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். இதைக் கண்டு நெகிழ்ந்து போன அண்ணாமலை கூட்டத்தைப் பார்த்து அமைதியாக இருக்கும்படி கையால் சைகை காட்டினார். இருப்பினும் தொண்டர்களின் அன்பு ஆர்ப்பரிப்பு அடங்கியபாடில்லை. இதனால் மேடையில் அமர்ந்திருந்த பாஜக தலைவர்கள் சற்று நெகிழ்ந்துதான் போயினர்.

தொடர்புடைய செய்தி