மதுரை: மேம்பாலத்தின் பேரிக்கார்டுகள் கீழே விழுந்து விபத்து

மதுரை ஓபுளா படித்துறை மேம்பாலத்தின் நடுவே வைக்கப்பட்டிருக்கக் கூடிய பேரிக்காடுகள் பலத்த காற்று காரணமாக வரிசையாக கீழே விழுந்து வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சிமெண்ட் பூசப்பட்ட நிலையில் பேரிக்காடுகள் வைக்கப்பட்டபோதும் சிறிய அளவிலான காற்று வீசும்போது கூட கீழே விழுகும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று பலத்த காற்று வீசியபோது மேம்பாலத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்த அனைத்து தடுப்புகளும் கீழே தொடர்ச்சியாக விழுந்த போது பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதி மீது விழந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் வாகனம் ஓட்டி வந்த நபரின் கை மற்றும் காலில் பேரிக்காடு சிமெண்ட் பூச்சுடன் விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

நல்வாய்ப்பாக பேரிக்காடு கீழே விழுந்த போது பைக்கில் இருந்து தவறி சாலையில் விழுந்த தம்பதியின் பின்னால் வந்த வாகனங்கள் உடனடியாக பிரேக் பிடித்து நின்றதால் தம்பதி நொடிப்பொழுதில் சேதமின்றி தப்பித்தனர். மதுரை ஓபுளா படித்துறை பகுதியில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் முறையாக சிமெண்ட் பூச்சு செய்து நட்டுகள் பொருத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேரிக்காடுகள் முழுவதுமாக சாலையில் சாய்ந்து விழுந்து வாகன ஓட்டிகள் மீது விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு காயம் ஏற்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி