இலங்கை தமிழர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன் அவை அத்தனையும் நிறைவேற்றி இருக்கிறார். குறிப்பாக தமிழக மீனவர்களை அதனை பேரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார், அவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார் அத்தனைக்கும் பாராட்டுக்குரியவர். கச்சத்தீவை காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரைவாக்கப்பட்டது அப்போது துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை ஆனால் இப்போது கட்சி தீவை மீட்க வேண்டும் என பேசி வருகின்றனர். பிரதமர் அவர்கள், கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவணம் செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்