மதுரை: பட்டப்பகலில் துணிகரம்; பெண்ணிடம் பணப்பை பறிப்பு

மதுரையில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம், பைக்கில் வந்த இருவர் பணப்பையை பறிக்க முயன்றனர். இதில் அந்தப் பெண் மற்றும் அவரது பேரனும் கீழே விழுந்தனர். தப்ப முயன்ற கொள்ளையர்கள் எதிரே வந்த பைக் மீது மோதி கீழே விழுந்தனர். பின்னர், இருவரும் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி