மதுரையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வான்வழி பயணத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சி பகுதியில் திடீரென தரையிறங்கியது. வயல்வெளியில் பலூன் தரையிறங்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரும் விபத்து என அச்சமடைந்தனர். பின்னர் அது தனியார் நிறுவனத்தின் சோதனை ஓட்டம் என தெரியவந்தது. கடந்த ஆண்டு இதே போன்ற விமான பயணத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.