மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர், உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சக்குடி அருகே எதிரே வந்த காவல்துறையினரின் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த சோனை ஈஸ்வரி (25) மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, காவல்துறை வேன் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உயிரிழந்தவர்களின் சகோதரி மங்கையர்கரசி, காவல்துறையினர் தவறான பாதையில் வந்ததாகவும், அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டி, பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.