இதனையடுத்து சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்ததாக பாலாஜி, கனி, மதுரைவீரன், ரஹ்மத்துல்லா, பிரகாஷ் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலாஜியையும், மதுரை புதுநகர் பகுதியைச் சேர்ந்த கனி(32) ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவர் மதுரை 6ஆவது சிறப்புப் பட்டாலியன் படையில் காவலராக உள்ளார். காவலர் பிரகாஷ் 3 ஆண்டுகளுக்கு முன் இதே பிரச்சினைக்காகவும், கிளப் மற்றும் விடுதிகளில் நடந்த சூதாட்டங்களுக்காகவும் மாமூல் வசூலித்து வந்த புகாரிலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டார். இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சேர்ந்த நிலையில் லாட்டரியை தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்