மதுரை சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் 16வது சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 30 ஆண்டுகளில் மிகக் குறைந்த நாட்களே நடைபெற்றதாகவும், இது ஜனநாயகப் படுகொலை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆண்டிற்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவதாகக் கூறிய நிலையில், தற்போது 161 நாட்கள் குறைவாக நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.