பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையாளர்கள் போராட்டம்

இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் பணி குறியீட்டினை குறைத்தல், நில அளவைக்கு தனியார் அளவர்களை நியமிப்பதை கைவிடுதல், குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்துதல், பதவி உயர்வு வழங்குதல், துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைதல், நீதிமன்ற நடைமுறைகளுக்கான பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கடந்த 18ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி