இன்று ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனை ஒரு கும்பல் ஆட்டோ டிரைவர் பால்பாண்டி என்பவரோடு மாணவனையும் கத்தியை காட்டி கடத்தி வைத்து கொண்டு மைதிலி ராஜலெட்சுமியிடம் போனில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் பணத்தோடு வராவிட்டால் சிறுவனை கொலை செய்வதாக கூறியதோடு, இதனை காவல்துறையிடம் கூறினாலும் சிறுவனை கண்டுபிடிக்க முடியாது எனவும் மிரட்டியுள்ளனர்.
இது குறித்து SS காலனி காவல் நிலையத்தில் தாயார் மைதிலி புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் காசி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிறுவனை கடத்தி மிரட்டிய கடத்தல் கும்பலை விரட்டிசென்றது.
காவல்துறையினர் தங்களை கண்டுபிடித்து பின்தொடர்வதை பார்த்த கடத்தல் கும்பல் 7ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை மதுரை நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பிசென்றது. இந்த கடத்தல் கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.