ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டம்; வெறிச்சோடிய அலுவலகங்கள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மதுரை மாவட்டத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி