தமிழக வெற்றிக்கழக மாநில இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார், தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், ஆசிரியர்களை அடிமை போல நடத்தி விண்ணப்பங்களை திமுகவினர் கையாடல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தலைவர் விஜய் முதல்வராவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.