மதுரையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் ஈடுபட்டனர். திமுகவை வீட்டுக்கு அனுப்ப இந்தக் கூட்டம் நடைபெறுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தனியாக நிற்க தயாரா என்றும், அவர்களால் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் திமுகவுடன் செல்வதாகவும் அவர் விமர்சித்தார்.