மதுரை மாநகரில், துரைச்சாமி நகர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் நவின் சந்தரின் சொகுசு காரின் இரண்டு டயர்கள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் இதேபோல் டயர்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.