மதுரை யாதவா கல்லூரியில் புதனன்று நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். தோட்டக்கலை விவசாயிகளுக்கும் உபகரணங்கள் மற்றும் பயிர் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஆட்சியர் பிரவீன் குமார், எம். எல். ஏ பூமிநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.