மதுரை: எஸ். ஐ. ஆர் பணிகள் குறித்து ஒன்றுமே புரியவில்லை -செல்லூர் ராஜு

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எஸ். ஐ. ஆர். கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முழுமையாக செயல்படவில்லை என்றும், சத்துணவு ஆயாக்கள், தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், ஆளும் கட்சி தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் மோசடியில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி