மேலும், 'தமிழகத்திலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழுமையான பட்டியலை கொண்ட தனி இணையதளத்தை அரசு 6 மாதங்களில் துவக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிய வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கிய பின் அகற்ற வேண்டும். 2000 ஜன.1க்குப் பின் நீர்நிலைகள் தொடர்பாக வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும்' என்றார். நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை ஒட்டுமொத்தமாக நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவை என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு