மதுரை: வீட்டு உபயோக பொருட்கள் சேதம்

மதுரை மாவட்டம் முழுவதிலும் காலை முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு வழியாக பெரியார் நகர் கிழக்கு குறுக்குத் தெருவில் செல்லக்கூடிய உயரமுத்த மின்கம்பிகள் (டவர் லைன்) வீடுகளின் மேற்கூரைக் கட்டிடங்களில் உரசியது. 

இதன் காரணமாக அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு, வீடுகளில் உள்ள ஸ்விட்ச் போர்டுகளில் மின்சாரம் அதிகளவில் வந்த நிலையில் ஸ்விட்ச் போர்டுகள் வெடித்து சிதறியதோடு பேன், பிரிட்ஜ், டிவி, செல்போன் உள்ளிட்டவைகள் வெடித்து சிதறியுள்ளன. மேலும் கட்டிடங்களிலும் மின்னழுத்தக் கம்பி உரசியதால் கட்டிடங்களும் விரிசல் விட்டு டைல்ஸ்கள் உடைந்து நொறுங்கின. 

இதேபோன்ற அருகில் உள்ள மற்றொரு வீடுகளிலும் மேற்கூரைக் கட்டிடத்தில் உயரமுத்த மின்கம்பி உரசியதால் வீடுகளில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறின. மதுரை பழங்காநத்தம் மாடக்குளம் பகுதியில் அதிகளவில் செல்லக்கூடிய டவர் லைன் என்று அழைக்கப்படும் உயர மின்னழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலையில் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக மின்கம்பிகள் வீட்டின் மீதும் கட்டிடங்களிலும் உரசியதால் வீடுகளில் உள்ள பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி