மதுரையில் இந்து மதத்தை அழிப்பேன் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து பழங்காநத்தம் ரவுண்டானா அருகே இன்று (மே. 17) மாலை இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், அரசுராஜா, மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.