மதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகரூ 65 லட்சம் மோசடி செய்த புதுக்கோட்டை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோ புதூர் கணேசபுரம் தெரு சீனி முத்தையா மகன் ராஜு 54. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சரவணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜுவிடம் கூறியுள்ளார். இதற்காக 2014 முதல் பல்வேறு கட்டங்களாக ரூ 65லட்சம் பெற்றுள்ளார். பெற்றுக்கொண்டு அவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டபோது திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து ராஜு கோ புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.