தூய்மையற்ற நகரில் முதலிடம் -ஆணையருக்கு மடல் மற்றும் சால்வை

2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 10 தூய்மையற்ற நகரங்கள் பட்டியலில் மதுரை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. வரி முறைகேடு, ஆட்சியாளர்களின் அலட்சியம் போன்ற காரணங்களால் மதுரை தூய்மையற்ற மாநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்டிக்கும் வகையில், மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், மதுரை மாநகராட்சி ஆணையருக்கு மன்னர்கள் ஆட்சி காலத்தில் வழங்குவது போன்ற வாழ்த்து மடலையும், பட்டு சால்வையையும் தபால் மூலம் அனுப்பியுள்ளார். மேலும், சுகாதார சீர்கேடு, குப்பைகள், பாதாள சாக்கடை அடைப்பு போன்ற பிரச்சனைகளை விளக்கும் புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார். இது மதுரை மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி