இதில் கடந்த ஜன. 14-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த விளாங்குடியைச் சேர்ந்த நவீன்குமார், கடந்த பிப். 12-ஆம் தேதி கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அலங்காநல்லூர் பாண்டி, கடந்த 16-ஆம் தேதி கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த மகேஷ்பாண்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி மூலம் தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார்.
மேலும், வாடிப்பட்டி வட்டம், டி. ஆண்டிப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது கழிவு நீர்க் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை கேசவனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சத்துக்கான காசோலையையும் அவர் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச. அன்பழகன், மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் ர. த. சாலினி, அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.