மதுரை அம்பேத்கர் காலனியில் கோபிராஜ் (39) - காயத்ரி (29) தம்பதியினர் தங்கள் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, காயத்ரி தனது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று, கோபிராஜ், தனது இரு மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து, பின்னர் அவர்களை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.