திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்பு.. ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சிஎஸ்ஐ நிர்வாகம் சார்பில் 7 கடைகள், 8 வீடுகள், ஒரு விடுதி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, தேவசகாயம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில், அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற எத்தனை உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி