மதுரை மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு (06001) ஏப்ரல் 18 மற்றும் 20ல் தாம்பரத்திலிருந்து மாலை 4: 45க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4: 40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் ஏப்ரல் 19 மற்றும் 21 இல் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.