பின்னர் காரை ஓட்டிவந்த நபரை அழைத்துவந்து விசாரணை நடத்தியபோது அதீத மதுபோதையில் இருந்த அந்த நபரின் பெயர் சிவா என்பதும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உஷ். உஷ். இப்படி ஊதுங்க என மதுபோதை ஆசாமியின் கையை பிடித்து ஊதி டிரெயில் காட்டியபோதும் அவர் உறுப்படியாக ஊதவில்லை, அப்போது மதுக்குடிப்பது போல் பிரெத் அனலைசர் மெஷினில் ஜிப் ஜிப்பாய் இழுத்து வித்தை காட்டினார் மதுபோதை ஆசாமி. என்னய்யா பாடா படுத்துறீங்க என்று கூறி மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்னர் சற்றே ஊதிய மதுபோதை 550 பாயிண்ட் அளவிற்கு அதீத மதுபோதையில் இருப்பது தெரியவந்த நிலையில் அபராதம் விதித்தோடு விபத்தை ஏற்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்தனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!