மதுரை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்த கடுகுமுனியசாமி (23) மற்றும் வண்டியூரைச் சேர்ந்த மோகன் (25) ஆகியோர் ஏப்ரல் 7 மாலை ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் கால்வாய் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர் அவர்களை விரட்டி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினர். ஒத்தக்கடை ரவுடி 'பொட்டுக்கடலை' பெரியசாமிக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.