மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் இன்று (பிப்ரவரி 21) திமுகவின் தென் மண்டல வாக்கு சாவடி நிலை முகவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் பங்கேற்கும் "என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி" மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி கூறுகையில்,தென் மாவட்டத்தின் 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1,98,000 வாக்குச்சாவடி முகவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். மாநாட்டிற்கான குடிநீர், இருக்கை, உணவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.