நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனும் வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. இன்னும் 9 மாதங்களில் தேர்தல் நெருங்குவதால் முதலமைச்சர் நீட் தேர்வு தொடர்பாக நாடகத்தை நடத்துகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக பொதுமக்களிடம் 50 லட்சம் கையெழுத்து பெற்றது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம் என்றார்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!