மதுரை கூடல் நகரில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் பிரேமலதா மதுரையில் போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.