ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய பக்தர்கள்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று 16-ம் தேதி திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தை துவக்கி உள்ளனர். மதுரையில் உள்ள ஆனந்த ஐயப்பன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி