மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?