மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிசிவன் திருக்கோவிலில் இன்று (மே. 14) மாலை குருவார பிரதோஷத்தை முன்னிட்டு ஆதி சிவனுக்கு முக்கனிகள் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிசிவனை தரிசனம் செய்தனர். வழிபாட்டுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.