மாவட்டத் துணைச் செயலாளர் வெங்கடேசன் எம். எல். ஏ. , மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜி. பி. ராஜா, பேரூர் செயலாளர் பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர் கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி , பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், அய்யங்கோட்டை விஜயக்குமார், கவுன்சிலா ஜெயகாந்தன் அரவிந்த், ராம் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத் தில் ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழ்நாட்டை ஏமாற்றாதே, நிதி எங்கே நிதி எங்கே எங்களுக்கான நிதி எங்கே, நீதி வேண்டும் நீதி வேண்டும் தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும், தடுக்காதே தடுக்காதே தமிழ் நாட்டின் வளர்ச்சியை தடுக்காதே, இன்னும் வரலை இன்னும் வரல பேரிடர் நிதி இன்னும் வரல, என்னாச்சு என்னாச்சு மெட்ரோ நிதி என்ன ஆச்சு உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டது.