மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியா்கள் சங்கத்தின் 34-ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகம் உள்பட 21 மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் மத்தியில், மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வெளியே உதவிப் பேராசிரியா்கள் நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 5 ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுக் கல்லூரி, அரசு உதவிப் பெறும் கல்லூரி என பாகுபாடு காட்ட வேண்டாம் என்றும் அவா்கள் முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான உதவிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.