மதுரை: தூய்மை பணியில் ஆட்சியர், எம்எல்ஏ

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட வக்ஃப் வாரியக் கல்லூரியில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில், மதுரை வடக்கு எம்எல்ஏ விஜய் அன்பன் முன்னிலையில், கல்லூரி வளாகத்தின் பின்புறத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கியிருந்த கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றும் மாபெரும் தூய்மைப் பணி நேற்று (மே 20) நடைபெற்றது. மதுரை மாநகராட்சி பணியாளர்கள், OurLand நிறுவன ஊழியர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி