மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, குபேந்திரன் என்ற சிறுவன் நேற்று (மே 24) நள்ளிரவு பைக்கில் வந்த கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டான். கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் பழிவாங்க திட்டமிட்டு, தனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளான். சிறுவனின் உடலை கைப்பற்றிய விளக்குத்தூண் காவல்துறையினர், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.