மதுரை: அண்ணா பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

அண்ணா பல்கலைக்கழக மண்டல மையங்களில் பணியாற்றும் 328 கௌரவ விரிவுரையாளர்கள், பணி நிரந்தரம், தொடர் வேலை வேண்டி மதுரை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு முன்னறிவிப்பின்றி தங்களுக்குப் பணி மறுக்கப்பட்டுள்ளதாகவும். 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களை, நீதிமன்ற உத்தரவுப்படி உதவிப் பேராசிரியர்களுக்கு இணையாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் இது அரசின் கொள்கை முடிவு என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி