மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள், புத்தாடைகள் அணிந்து, வருடம் தோறும் பக்ரீத் சிறப்பு தொழுகையை நடத்தி வருகின்றனர், இன்று பக்ரீத் திருநாளை முன்னிட்டு, 300 அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.