இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உணவகத்திற்கு சென்ற பாலகுருசாமி அங்கு இருந்த சிறைவாசியின் மகள் ஒருவரிடம் பேசி வந்துள்ளார். இதனையடுத்து மகளின் மகளான பேத்தியான பள்ளி மாணவி முன்னாள் சிறைவாசியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். அப்போது அவரது சித்தியுடன் கடையில் இருந்தபோது தனது செல்போன் எண்ணைக் கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறி கொடுத்திருக்கிறார். இதனிடையே இன்று காலை உதவி ஜெயிலர் பாலகுருசாமி ஆரப்பாளையம் பகுதியில் மாணவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாணவியின் சித்தியான இளம்பெண் தன் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி பாலகுருசாமியை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியிலே வைத்து அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாலகுருசாமி மற்றும் இளம்பெண் மற்றும் மாணவி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.