இதையடுத்து, ஆசிரியா்களுக்கான நோ்முகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. அதில், தோ்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். இதுதவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 7 தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச. கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) த. ராஜேந்திரன், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.