துரை தயாநிதியை விடுவிக்க முறையீடு

மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ. 259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் துரை தயாநிதி ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 2012-ல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உள்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5, 191 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கையை 2018-ல் தாக்கல் செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக துரை தயாநிதி மீது அமலாக்கப் பிரிவு தனி வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் தன்னை விடுக்க கோரி துரை தயாநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகவேல் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது துரை தயாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துறை தயாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மனரீதியான பிரச்சனைகள் இருப்பதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு முறையிட்டனர்.

பின்னர் நீதிபதி துரை தயாநிதியின் சிகிச்சை குறித்தான முழுமையான மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறி வழக்கு விசாரணை வரும் 16ம் தேதி அன்று ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி