மதுரை: அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்; மயங்கி விழுந்ததால் பரபரப்பு

மதுரையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 5 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது, திருப்பரங்குன்றம் பகுதி அங்கன்வாடி பணியாளர் அங்காள ஈஸ்வரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வராத நிலையில், சக ஊழியர்கள் அவரை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி