ஒவ்வொரு மாநாட்டின் மாலை வேளையில் திரைப்பட கலைஞர்கள் கொண்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெறுவுள்ளன. செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒத்திகை நடைபெறுவுள்ளது. மாநில உரிமைகளை காப்போம் என்ற கருத்தரங்கு நடைபெறுவுள்ளது. 4ஆம் தேதி விஜய் சேதுபதி, சமுத்திரகனி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டிற்கான அழைப்பை அதிகாரப்பூர்வமாக இன்றைக்கு வெளியிடுகின்றோம். அகில இந்திய மாநாடு நடைபெறுவுள்ளது ஒரு மினி இந்தியாவை இங்கு இருக்கப்போகிறது. இதைப் பற்றி பேசுவோம். அகில இந்திய பொதுச் செயலாளர் இந்த மாநாட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் சதியை முறியடிக்க கூடிய வகையில் ஒன்றுபட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அதற்கான நடவடிக்கைகளை மாநாட்டு மூலம் ஏற்படுத்துவோம் என்றார்.