100 / 100 மதிப்பெண் பெற்று அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை

கோ புதூர் பகுதியில் 100 / 100 மதிப்பெண் பெற்று அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் சாதனை

11-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (19-05-2023) பிற்பகல் வெளியானது. மாணவர் நலன் கருதி தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புத்திறன்கள் (Employability Skills) என்ற பாடத்தில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவர் Mமாதவன் 100 / 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த பாடம் தமிழக அளவில் இந்த கல்வியாண்டில் (2022-2023) அறிமுகபடுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்களைப் புரிந்து கொண்டு, ஆங்கில மொழித்திறன்கள். தகவல் தொடர்புத்திறன்கள், மின்னனு திறன்கள், தொழில் முனைவு. நிதி கல்வியறிவு போன்ற 21 ஆம் நூற்றாண்டிற்கான திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பு சார்ந்த உலகத்திற்கு மாணவர்களை தயார் ஆக்குவதே வேலைவாய்ப்புத்திறன்கள் (Employability Skills) பாடத்தின் நோக்கமாகும் சாதனை படைத்த மாணவனை பள்ளிநிர்வாகிகள், தலைமையாசிரியர் ஷேக் நபி, ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர் பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி