மதுரை: இயந்திரங்களை கொண்டு பால் கறக்கப்படும் - மனோ தங்கராஜ்

உலக பால் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மதுரை மற்றும் தேனி ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் நல்ல லாபத்தில் இயங்குவதாக தெரிவித்தார். மேலை நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் இயந்திரங்களைக் கொண்டு பால் கறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி