மதுரை: அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் வழக்கு பதிவு

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 9 தேதி அதிகாலையில் பயணிகளை பேருந்தில் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கணேசன் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் காலனி தாக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் மாரிமுத்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் போராட்டங்களை நடத்திவந்தனர். 

இதனையடுத்து ஓட்டுனர் கணேசன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் மீதும் அரசு பணியாளரை தாக்குதல், மிரட்டல், அசிங்கமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கூட்டமாக சேர்த்து தாக்குதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி