இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனை முன்பாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் பைக் முழுவதுமாக தீயானது பரவ தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இதனையடுத்து விரைந்துவந்த தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட பைக் பெட்ரோல் டேங்கில் அதிகளவிற்கு பெட்ரோல் நிரப்பபட்டிருந்த நிலையில் பைக் வெடித்து சிதறி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்கும் பகுதிக்கு செல்லவிடாமல் தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல்துறையினர் தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் மருத்துவமனை அருகே போதையில் இருந்த நபர் சிகரெட்டை பற்றவைத்து பைக்கில் தூக்கிவீசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனையை ஒட்டிய பகுதிகளில் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.