மதுரை யானைமலை அருகே உள்ள உலகனேரி அரசு மாதிரிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறையில் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் பாம்பைக் கண்டு அலறியடித்து ஓடினர். பின்னர் சம்பவ இடம் வந்த பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரன் பாம்பைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.